ஆபரேஷன் அஜய் திட்டம்.. இஸ்ரேலில் இருந்து இந்தியர்களுடன் டெல்லி வந்த முதல் விமானம்..!

வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:25 IST)
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் டெல்லி வந்தடைந்தது.

212 இந்தியர்களுடன் முதல் விமானம் டெல்லி வந்ததாகவும், இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக வந்த இந்தியர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இஸ்ரேல், காசாவில் சிக்கி தவிக்கும் 18,000 இந்தியர்களை மீட்க 'ஆபரேசன் அஜய்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதும், மீதமுள்ள இந்தியர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான பணிகளை இந்தியா தொடங்கியது. இதற்காக இஸ்ரேல் அரசிடம் பேசி விமானங்கள் மூலம் அங்குள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பதும், இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் அஜய்’ என பெயரிடப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்