அந்த நிகழ்ச்சியில் ஒரு மருத்துவரும், ஒரு பெண்ணும் இடம் பெறுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் ஆபசமாக ஆடை அணிந்து வருவதோடு, ஆபாசமாகவும் பேசுகின்றனர். இதனால், இந்த நிகழ்ச்சி பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அப்படி ஆபாச உடை அணிந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள எஸ்.வி.சேகர் “ஆபாச படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆபாச நிகழ்ச்சிகள் நேரிடையாக ஒளிபரப்பப்படுகின்றன. இது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்” என குறிப்பிட்டுள்ளார்.