இந்திய ரயில்வேயில் செயல்படும் நீண்ட தொலைவு ரயில்களில் கேண்டீன்களை IRCTC நடத்தி வருகிறது. ரயிலில் பயணிப்பவர்கள் டிக்கெட் புக் செய்யும்போதே ஐஆர்சிடியில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆனால் பல சமயங்களில் ஐஆர்சிடிசியால் வழங்கப்படும் உணவுகள் குறித்து பயணிகள் அடுக்கடி புகார்கள் அளிப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கோரக்பூரிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் ஐஆர்சிடிசி உணவை பயணி ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். அதை திறந்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த குலோப்ஜாமூனில் கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்த அவர் அதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.