ஆட்டோ டிரைவர் வங்கிகணக்கிற்கு ரூ.9000 கோடி சென்ற விவகாரம்: வங்கியின் சி.இ.ஓ ராஜினாமா..

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:43 IST)
சமீபத்தில் சென்னை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரது வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ரூ.9000 கோடி ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கிருக்கு தவறுதலாக பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் அதன் பின்னர் அவருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை திரும்ப பெற்றனர். 
 
இருப்பினும் அவர் அந்த பணத்தை கொண்டு 21 ரூபாய் செலவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில் தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் என்பவர் ராஜினாமா செய்து உள்ளார். 
 
இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு வருட காலம் இருக்கும் நிலையில் ரூ.9000 கோடி விவகாரத்தால் ராஜினாமா செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்