''ரூ..6 .5 லட்சம் லஞ்சம்''... சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் புகார்

வியாழன், 28 செப்டம்பர் 2023 (19:11 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி.
 

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு மும்பையில்  உள்ள சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6. 5 லட்சம் பெற்றதாக விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர்,  ஊழல் பற்றி படங்களில் காட்டுவது சரிதான் ஆனால், நிஜ வாழ்வில்  ஊழல் நடப்பதை என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்