மழையால் உயிரிழந்தவர்களுக்கான ரூ.4 லட்சம் நிவாரணம்

வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:24 IST)
மழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் இந்த நிவாரண நிதியை 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பத்து நாட்களுக்கு அவர்களுக்கு குடும்பத்தில் இந்த பணம் போய் சேரும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மழை பெய்வது நின்றுவிட்டால் நாளைக்குள் தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 2649 பெயர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்