சென்னையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்! – வானிலை ஆய்வு மையம்!

வியாழன், 11 நவம்பர் 2021 (17:43 IST)
சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று சென்னையில் கரையை கடந்து வருகிறது.

இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பலமான காற்று மட்டுமே வீசும் என்பதால் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்