போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 13 மணிநேரத்திற்கும் அதிகமாக சென்னை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விகயபாஸ்கருக்குச் சொந்தமாக இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில் , வருமானத்துறையினரின் இந்தச் சோதனையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.