ரூ.2000 சிறப்பு நிதி பெற விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்! என்ன செய்ய வேண்டும்...

புதன், 27 பிப்ரவரி 2019 (13:52 IST)
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் சிறப்பு நிதியுதவி ரூ.2000 பெற விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 
இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், கஜா புயலின் காரணமாகவும், பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 
 
இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு, குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒருமுறை சிறப்பு நிதி உதவியாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 2000 வீதம் வழங்கப்படுகிறது. அதன்படி முதல் கட்டமாக தேனி மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் பொருளாதார நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட ஏழைகள் மற்றும் மிகவும் ஏழைகள் பட்டியலில் உள்ள குடும்பங்களின் விவரமும், நகர்ப்புற பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ஏழை மற்றும் மிகவும் ஏழைகள் குறித்த பட்டியல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் விடுபட்ட சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஏழைக் குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி வாய்ந்த ஏழைக் குடும்பத்தினர் ஊரகப் பகுதிகளில் இருந்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி , நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை www.tnrd.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
 முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை மறுநாள் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்