ஐரிஸ் நாட்டின் ’பிராடன் கிரீனி’ என்பவர் அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என இந்த கேமை சித்தரித்து உருவாக்கியுள்ளார்.
பப்ஜி விளையாட்டை விளையாடாதவர்களின் எண்ணிக்கை குறைவு என்றேதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் 10 கோடி பேர் தினமும் விளையாடி வருகின்றனர். முதலில் வெளிநாடுகளில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த கேம், கடந்த மார்ச் மாதம்தான் இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகமாகிய சில மாதங்களில் நம்மவூர் இளைஞர்களும் இதற்கு அடிமையாகிவிட்டனர்.
வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் விளையாடி வந்த பப்ஜி இனி பணம் சம்பாதிக்கவும் வழிவகுக்கிறது. ஆம், War90.com என்ற இணையதளம் PUBG விளையாடுபவர்களுக்காக ஒரு போட்டி ஒன்றை நடத்திவருகிறது.தினமும் இரவு 10 மணிக்கு இந்த போட்டி நடத்தப்படும்.இந்த போட்டியினுள் நுழைய நுழைவு கட்டணமாக வெறும் 30 ரூபாய் கட்டினால் போதும்.
இப்போட்டியில் முதல் இடத்தை பெறுவோருக்கு 400 ரூபாய் பரிசும் இரண்டாவது இடத்தை பிடிப்போருக்கு 200 ரூபாய் பரிசும் அளிக்கபடுகிறது. அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பங்குபெறும் ஓவ்வொரு நபருக்கும் பரிசுகள் வழங்கபடுகிறது. ஆட்டத்தின் முடிவுவரை நீங்கள் நிலைத்து ஆடினால் உங்களுக்கு ரூ . 2000 வரை பரிசாக கிடைக்கும்.