நெடுதூரம் பயணிப்பவர்கள் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்வதால் அரசு பேருந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், 500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை, மின் விசிறி, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க தேதி கொடுக்காததால் 3 மாதங்கள் அந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதற்காக ரூ.10.29 கோடி வட்டியாக தமிழக அரசு கொடுத்தது. அதேபோல், எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பேருந்துகளை குறித்த காலத்திற்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.