ஒத்துழைக்க மறுக்கும் மருத்துவர்கள்: ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணையில் சிக்கல்

புதன், 4 ஜூலை 2018 (08:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி அவர்களின் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆணையர் ஆறுமுகச்சாமி முன் பலர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் சில மருத்துவ அறிக்கைகளை ஆணையரிடம் சமர்ப்பித்தனர். இந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் குறித்து ஆணையரிடம் விளக்க மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. தமிழக அரசும் இதற்கான அனுமதியை அளித்திருந்தது
 
ஆனால் இந்த மருத்துவக்குழுவில் இடம்பெற தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களை யாரும் விருப்பம் காட்டவில்லை என தெரிகிறது. எனவே தமிழக மருத்துவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் அழைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்