6 வது ‘ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட் ’ விருதுகள்! முன்னாள் இராணுவ அதிகாரிகளை கௌரவித்த ஷரான் பிளை

புதன், 8 அக்டோபர் 2025 (10:54 IST)

பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களாக மாறியிருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை கௌரவித்த  ஷரான் பிளை – ன் 6 வது ‘ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட் ’ விருதுகள்

 

 

 

●       ஆற்றலையும், மீட்சித்திறனையும் வெளிப்படுத்தி சமுதாயத்திற்கு மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கிய சாதனை நபர்களை கௌரவிக்க ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தைச் சார்ந்து இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் ஷரான் பிளை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

 

●       “நமது தேசத்தின் சமீபத்திய பெருமைக்கும், புகழுக்கும் காரணமாக பின்புலத்திலிருந்த குரல்கள்” என்பது, நடப்பு ஆண்டு விருது நிகழ்வுக்கான கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருந்தது; பிரபலமான பாதுகாப்பு பகுப்பாய்வு நிபுணர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை இந்த பதிப்பு அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது.

 

 

 

சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நம் நாட்டின் வெற்றிக்கும், புகழுக்கும் பின்புல ஆதரவை வழங்கிய குரல்களுக்கு சொந்தக்காரர்களான பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஷரான் பிளை நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வான “ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்” ஆறாவது பதிப்பு கௌரவித்திருக்கிறது.  இந்த இராணுவ நடவடிக்கையில் இவர்களின் கருத்துரைகளும், தகவல்களும் கொள்கை வகுப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழிகாட்டலை வழங்கியது; அத்துடன், இராணுவ வீரர்களுக்கு அவர்களது போர் செயல்பாடுகளின்போது மதிப்புமிக்க யோசனைகளையும், கண்ணோட்டங்களையும் தந்திருந்தது.

 

 

 

இந்நாட்டில் பிளைவுட் பிரிவில் முன்னணி பிராண்டான ஷரான் பிளை, சென்னை அருகே உள்ள கும்முடிப்பூண்டியில் பிளைவுட் தயாரிப்பிற்கான இந்தியாவின் மிகப்பெரிய தொழிலகத்தைக் கொண்டிருக்கிறது.  இந்த ஆண்டு நிகழ்வில், லெப்டினன்ட் ஜெனரல்  S. ஹரிமோகன் ஐயர், AVSM** (ஓய்வு); லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், PVSM, AVSM (ஓய்வு); லெப்டினன்ட் ஜெனரல் P.R. சங்கர், PVSM, AVSM, VSM (ஓய்வு); மற்றும் மேஜர் ஜெனரல் ராஜிவ் நாராயணன், AVSM, VSM (ஓய்வு) ஆகியோரை “ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்” விருதுகள் மூலம் ஷரோன் பிளை கௌரவித்திருக்கிறது. இராணுவத்திலும் மற்றும் ஆராய்ச்சியிலும் முதுநிலை பொறுப்புகளோடு தேசத்திற்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய இவர்கள் இப்போது சிறப்பான பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களாக தங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.   

 

 

 

ஷரான் பிளை நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு. விஷ்ணு கெமானி இந்நிகழ்வில் பேசுகையில், “பலம் என்பது, இராணுவ அல்லது காவல்துறை சீருடையை அணிந்திருக்கும்போது தான் எப்போதும் வெளிப்படும் என்று சொல்ல இயலாது.  சில நேரங்களில்  பகுப்பாய்வு, விவேகம் மற்றும் ஆழமான நம்பிக்கையுடன் கூடிய மனஉறுதி வழியாகவும் பலத்தின் குரல் வலுவாக ஒலிக்கக்கூடும்; போர்க்களத்தில் முன்னணியில் கள வீரர்களாக இல்லாமலேயே பின்னாலிருந்து தங்களது சேவைகள் வழியாக தேசத்தை இந்த திறமைசாலிகள் வழிநடத்தக்கூடும்.  இன்று விருதுபெறும் இந்த முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை.  தாங்கள் தேசத்திற்காக சீருடையிலிருந்து ஆற்றிய சேவையை இப்போது மறுவரையறை செய்திருக்கின்றனர். உலகமே நமது இராணுவ வீரர்களை பாராட்டுகின்ற வேளையில், மனங்களை மேலும் வலுப்படுத்தி, கொள்கைகள் வகுக்கப்படுவதில் வழிகாட்டி மற்றும் நாட்டின் குடிமக்களை தங்களது மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் ஒன்றிணைத்திருக்கின்ற இந்த சாதனையாளர்களை கௌரவிப்பது என்று நாங்கள் முடிவு செய்தோம்.  நமது தேசத்தின் நம்பிக்கையை கட்டமைக்கின்ற, வெளிப்படையாக கண்ணுக்குப் புலப்படாத சிற்பிகளாக இவர்கள் இருக்கின்றனர்.

 

 

 

#iamstrongest விருது குறித்து அவர் கூறியதாவது: “2019-ம் ஆண்டில் எமது நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்த விருது திட்டமானது, வலுவான ஆற்றல், மீள்திறன் மற்றும் மனஉறுதி மிக்க செயல்பாட்டின் மூலம் தனிநபர்கள் நிகழ்த்துகின்ற சாதனைகளுக்கான எமது அஞ்சலியாகவும், கௌரவமாகவும் இருக்கிறது.  சமுதாயத்திற்கு மிகச்சிறப்பான பங்களிப்புகளை வழங்கிய தனிநபர்களை பாராட்டி, கௌரவிக்கும் வருடாந்திர விருதுகள் நிகழ்வானது இத்திட்டத்தின் முதன்மை அம்சமாகும்.  தாராள சிந்தனை கொண்ட கனிவான, கர்வம் இல்லாத, வலுவான சாதனையாளர்களை கொண்டாடுவது நமது முக்கியமான கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.  இந்த விருது திட்டத்தின் மூலம், மனிதர்களால் நிஜத்தில் சாதிக்கக்கூடிய திறனை உலகிற்கு வெளிப்படுத்துகிறவாறு மனஉறுதி, தைரியம், புரிந்துணர்வு மற்றும் சுயநலமின்மை ஆகிய நற்பண்புகளை தங்கள் செயல்களின் மூலம் வெளிப்படுத்துபவர்களை கௌரவித்து, உலகறியச் செய்வது எமது நோக்கமாகும்.  சமூகப் பொறுப்புணர்வுள்ள ஒரு நிறுவனமாக இந்த உன்னதமான குறிக்கோள் மீது நாங்கள் ஆழமான அர்ப்பணிப்பை கொண்டிருக்கிறோம்; இனிவரும் ஆண்டுகளிலும் மாறுபட்ட வெவ்வேறு வகையினங்களில் ஆக்கப்பூர்வ மாற்றங்களை உருவாக்கும் சாதனையாளர்களை நாங்கள் தொடர்ந்து இவ்விருதுகள் மூலம் அங்கீகரிப்போம்.”

 

 

 

இத்திட்டத்தின் குறிக்கோளையொட்டி இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைச் சார்ந்து வழங்கப்படுகிறது. ஆற்றலையும், விடாமுயற்சியுடனான மீள்திறனையும், தங்களது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்துகின்ற தனிநபர்களை இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன.  2019-ம் ஆண்டில், வழங்கப்பட்ட முதல் தொடக்க நிகழ்வில் மனஉறுதி, தைரியம் மற்றும் தன்னலமின்மை ஆகிய பண்புகளை தங்கள் செயல்பாடுகளில் நேர்த்தியாக வெளிப்படுத்திய சாதனையாளர்களை ஷரான் பிளை கௌரவித்திருக்கிறது.  முதன் முறையாக இவ்விருதுகளை பெற்றவர்களுள் Ms. மாலதி (சர்க்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனை) மற்றும் Ms. லோகம்மாள் (குழந்தைகள் நாடாளுமன்றத்தின் வழியாக சமூக மாற்றத்தை உருவாக்குபவர்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  2020-ம் ஆண்டின் கோவிட்-19 தொற்றின் காரணமாக, முன்கள வீரர்களாகப் பணியாற்றி தங்களது உயிர்களை தியாகம் செய்த டாக்டர். A. சைமன் ஹெர்குல்ஸ், காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி மற்றும் செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

 

 

 

2021-ம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது தங்களின் செயல்பாடுகளின் வழியாக மக்களின் மனங்களை கவர்ந்து ஹீரோக்களாக பாராட்டப்பட்ட சாமானியர்களை இவ்விருதுகள் கௌரவித்தன. திரு. முத்துப்பாண்டி (பழ வியாபாரி, தூத்துக்குடி), திரு. சந்திரசேகர் மற்றும் திருமதி. புஷ்பராணி (ரூ.5 என்ற விலைக்கு அரிசியை வழங்கிய திருச்சி தம்பதியர்), திரு. அருண் குமார் (நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பு, சென்னை) மற்றும் திரு. கல்யாணசுந்தரம் (தெருவோர உணவு விற்பனையாளர் ஆகியோர் விருதுபெற்ற சாதனையாளர்கள். 2022-ம் ஆண்டில், விலங்குகள் நலனுக்காக அயராது பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  Ms. அஞ்சலி ஷர்மா, திரு. சேகர் (பறவை மனிதர், சென்னை), Ms. பிரபா வேணுகோபால், திரு. ஷ்ரவன் குமார் மற்றும் தி எலிபண்ட் விஷ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற ஆவணப் படத்தில் இடம்பெற்ற திரு. பொம்மன் மற்றும் திருமதி. பெல்லி ஆகியோர் விருது வென்ற சாதனையாளர்களாவர். 

 

 

 

2024- ம் ஆண்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் ஹாக்கி ஜாம்பவான்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  திரு. வாசுதேவன் பாஸ்கரன், திரு, சார்ஸ் கொர்னேலியஸ், திரு, முனீர் சையது, திரு. விக்டர் ஜான் பிலிப்ஸ் மற்றும் திரு. கிருஷ்ணமூர்த்தி பெருமாள் ஆகிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

 

 

1987-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஷரான் பிளை நிறுவனம், பிளைவுட், அலங்கார வெனீர்கள் மற்றும் தொடர்புடைய தயாரிப்பு பொருட்களில் இந்தியாவில் மக்களின் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டுகளுள் ஒன்றாகும்.  ஐஎஸ்ஓ 9002 மற்றும் ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் இந்நிறுவனம், தயாரிப்புகளில் தரம், புதுமையான உத்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு தோழமையான உற்பத்தி நடைமுறைகள் ஆகியவை மீது தொடர்ந்து காட்டி வரும் அர்ப்பணிப்பிற்காக அறியப்படும் ஒரு பிராண்டாகும்.  பிசினஸ் செயல்பாடுகள் என்பதையும் கடந்து, மீள்திறன் மற்றும் செயல்நேர்த்தி ஆகிய நற்பண்புகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு, தங்கள் குணநலன்கள் மூலம் சமுதாயத்திற்கு உத்வேகம் அளிக்கும் தனிநபர்களை கௌரவிக்கும் நோக்கத்தோடு #iamstrongest விருதுகளை நிறுவியிருக்கிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்