இந்த தகவல் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர் ராஜவேலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜவேலு அங்கு சென்று அந்த ரவுடிகளை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், மது போதையில் இருந்த ரவுடிகள் அவரை சராமரியாக தாக்கியுள்ளனர்.
உயிருக்கு போராடிய ராஜவேலுவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரின் விசாரணையில் ராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் ரவுடியான அரவிந்தன் மற்றும் அவனின் கூட்டாளிகளான ஜிந்தா, வேல்முருகன் உள்ளிட்டோர் ராஜவேலுவை தாக்கியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.