”ஒரு கையில் சரக்கு, இன்னொரு கையில் கத்தி”.. பொது வெளியில் சாவகாசமாக நடந்து சென்ற ரவுடிகள்

திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:05 IST)
கும்பகோணத்தில், ஒரு கையில் சரக்குடனும், மறு கையில் பட்டாக்கத்தியுடன் சாலையில் நடந்த சென்ற ரவுடிகளை கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பழைய டைமண்ட் தியேட்டர் அருகே ஒரு டாஸ்மாக் இயங்கிவருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரண்டு பேர் அந்த டாஸ்மார்க் கடைக்கு வந்து பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கியுள்ளனர். வாங்கிய  மதுபானங்களுக்கு டாஸ்மாக்  ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். அப்போது திடீரென இருவரும் தங்களது பையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து ஊழியர்களை மிரட்ட ஆரம்பித்தனர்.

அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வாயடைத்து போனனர் டாஸ்மாக் ஊழியர். அதன் பிறகு ஒரு கையில் பட்டாக்கத்தியுடனும் மறு கையில் மதுமான பாட்டிலுடனும் அசால்ட்டாக தெருவில் நடந்துச் சென்றுள்ளனர். இதனை கண்ட அங்கிருந்த பொது மக்கள் பெரும் பீதியடைந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பட்டாக்கத்தியுடன் அசால்ட்டாக இரு ரவுடிகள் தெருவில் நடந்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே மட்டுமல்லாமல், டாஸ்மாக் ஊழியர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்