மொத்த ரயில்வே சேவையும் ஒரே செயலியில்..! ரயில்வேயின் புதிய SwaRail app!

Prasanth Karthick

ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (08:45 IST)

இந்திய ரயில்வேயின் பலத்தரப்பட்ட சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் மத்திய ரயில்வே Swarail என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் இந்திய ரயில்வேயின் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ரயில் டிக்கெட் புக் செய்ய, முன்பதிவு நிலை அறிதல் போன்றவற்றிற்கு ஐஆர்சிடிசி தளத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுபோல ரயில் நிலையங்களில் ரயில் எந்த ப்ளாட்பாரத்தில் நிற்கிறது? எந்த இடத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட தகவல்களை Where is my train போன்ற செயலிகள் மூலமாக தெரிந்து கொள்கின்றனர்.
 

ALSO READ: இன்று ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு..!

 

இந்நிலையில் ரயில்வே பயணிகளுக்கு ஒரே செயலியில் அனைத்து வசதிகளை அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே அமைச்சகமே SwaRail என்ற புதிய செயலியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், முன்பதிவில்லா டிக்கெட்டுகள், ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், ரயில் விவரங்களை அறிதல், ரயில் எங்கே வருகிறது என ட்ராக் செய்தல், ரயில் பெட்டியின் அமைப்பு உள்ளிட்ட பல விவரங்களை பெற முடியும்.

 

இதனால் ரயில் பயணிகள் ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலியை தேடி செல்லும் அவஸ்தைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது SwaRail செயலியின் Beta Version ப்ளேஸ்டோரில் வெளியாகியுள்ளது. அதை பயன்படுத்தி பயனாளர்கள் தரும் கருத்துகளை கொண்டு செயலியை மேலும் மேம்படுத்தி விரைவில் அறிமுகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்