மீண்டும் மீண்டும் ரயில் விபத்து: மும்பை உள்ளூர் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..!

Mahendran

சனி, 19 அக்டோபர் 2024 (10:07 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிக ரயில் விபத்துகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரயில் விபத்து நடந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் மும்பையில் உள்ளூர் ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு செல்ல இருந்த உள்ளூர் ரயில், நடைமேடை இரண்டில் தடம் புரண்டதாகவும், ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டு, ரயில் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இருப்பினும் அடிக்கடி ரயில் விபத்து நடப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்டெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் மும்பை புறநகர் ரயில் 2 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், தற்போது மீண்டும் தடம் புரண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்