கொரோனா நோயளிகளை கவனிக்க ரோபோ...

வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (15:46 IST)
கொரோனா நோயாளிகளுக்கு உதவ சென்னையில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045 க உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,935, அமெரிக்காவில் 6,095 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,26,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,18,586 பேர் குணமடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்தியாவை பொருத்த வரையில் 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 156 பேர் குணமடைந்துள்ளனர், 56 பேர் மரணித்துள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் குணமடைந்துள்ளனர், 1 மரணமும் நிகழ்ந்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை பார்த்து வருகிறோம். எனவே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா நோயாளி அல்லது தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருந்து, உணவு வழங்கும் பணியில் இந்த ரோபோ ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்