ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரசி அளவு குறைப்பு: தமிழக அரசு!

திங்கள், 11 மே 2020 (12:16 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு என அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 17 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீட்டிக்கபப்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிகிறது. ஏற்கனவே மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்க ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலகவசமாக வழங்கப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு 19 பொருட்களை 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டமும் அரசால் செயல்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 
 
ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 12 கிலோவாகவும் குறைப்பு. இதற்கு முன்னர் ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்