பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்.. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது..!
புதன், 12 ஏப்ரல் 2023 (18:49 IST)
அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு பேருந்தில் பெண் காவலர் ஒருவர் பயணம் செய்த போது அவரிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தர்மன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சிறிது நேரம் பொறுமை காத்த அந்த பெண் காவலர் ஒரு கட்டத்தில் தர்மனிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு கலகலப்பு ஆகியது. இதனை அடுத்து பெண் காவலர் சக போலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்த போலீஸ் தர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண் காவலரை தாக்கியது, தீய சொற்களை பயன்படுத்தியது, காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் தர்மன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.