ஓபிஎஸ் உடன் முன்னாள் டிஜிபி திலகவதி சந்திப்பு. ஆதரவு கொடுத்தாரா?

சனி, 11 மார்ச் 2017 (04:07 IST)
அதிமுகவை சசிகலா குடும்பத்திடம் இருந்து மீட்பேன் என்று தனி அணியாக இயங்கி வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை 11 எம்எல்ஏக்களும், 12 எம்.பிக்களும் ஆதரவாக உள்ளனர். மேலும் தமிழக அரசு அதிகாரிகள் பலரும் ஓபிஎஸ் அவர்களுக்கு மறைமுக ஆதரவு தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது



 


அதுமட்டுமின்றி அதிமுக தொண்டர்களில் 80% பேர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில்  ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார்.. இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது.

மேலும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சந்திப்பா? என்\று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பை முக்கியத்துவமான சந்திப்பாக ஊடகங்கள் பார்க்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்