மாண்புமிகு அமைச்சருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!

புதன், 16 ஜூன் 2021 (22:28 IST)
கருவூர், திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன், மாண்புமிகு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழக சுற்றுவட்டப் பார்வையில் தந்தை பெரியார் நூலை வழங்கி அரசின் சிறப்பான திட்டங்கள், செயல்பாட்டை பாராட்டினார். அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் இடம்பெறச் செய்தும், பஞ்சாயத்து, நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி அலுவலக முகப்புகளில் "தமிழ் வாழ்க" மின் ஒளிப்பலகையை மீண்டும் அமைக்கவும், பேருந்துகளில் திருக்குறள் திருவள்ளுவர் படம் தவறாது இடம் பெறவும் சட்டம் மூலம் ஆவன செய்ய கேட்டுக் கொண்டார்.
 
தன்னுடய பிறந்த நாளையொட்டி அமைச்சரின் வாழ்த்துக்களையும் பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்