தமிழ்நாட்டிற்கு பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்

செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:09 IST)
திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  தமிழ்நாடு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அதில், மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
 
சென்னை- பினாங்கு, சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான   சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும்.
 
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2வது கட்ட பணிகளுக்கு பங்குப் பகிர்வு மாதிரி அடிப்படையில் மத்திய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், இருவழிச்சாலையை மேம்படுத்தப்படும் நெடுஞ்சாலைகளுக்கு  சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.
 
சென்னை, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை கடும் இயற்கை பேரிடர்களாக அறிவித்து, தேசிய பேரிடர்  நிவாரண நிதியில் இருந்து உரிய நிதியை தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு செலவழித்து வருகிறது. முன்பை விட 2.5 மடங்கு நிதியை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு அளித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்