போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வின் மறுமதிப்பீடு -மெட்ரோ நிர்வாகம்

Sinoj

செவ்வாய், 5 மார்ச் 2024 (23:13 IST)
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி அல்லது சின்னமலை வரை நீட்டிக்கப்படும் விரைவானபோக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வுக்கானமறுமதிப்பீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

’’சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரை மற்றும் வேளச்சேரியில் இருந்து கிண்டி அல்லது சின்னமலை வரை நீட்டிக்கப்படும் விரைவான போக்குவரத்துஅமைப்பை செயல்படுத்துவதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வின் மறுமதிப்பீட்டிற்கானஆலோசனை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை புதுப்பித்தல் போன்றபணிகளுக்கான ஒப்பந்தத்தை SYSTRA MVA கன்சல்டிங் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு இன்று(05.03.2024) வழங்கியுள்ளது.

தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரை மற்றும் வேளச்சேரியில் இருந்து கிண்டி அல்லது சின்னமலைவரை 26 கி.மீ. நீளத்திற்கு நீட்டிக்கப்படும் விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளுக்கானபோக்குவரத்து தேவை முன்னறிவிப்பு அறிக்கையை தயாரிப்பது இப்பணியின் நோக்கம். தமிழ்நாடு அரசுக்குச்சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின்படி, வழித்தடமானது வேளச்சேரி MRTSநிலையம் வரை மட்டுமே முன்மொழியப்பட்டது மற்றும் வேளச்சேரியின் முக்கிய வணிக மற்றும் குடியிருப்புபகுதிகள் வழியாக தற்போதுள்ள மெட்ரோ நிலையங்களை இணைப்பதை கருத்தில் கொள்ளவில்லை. எனவே, போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வின் மறுமதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் SYSTRA MVA கன்சல்டிங் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சந்தீப் புல்லர் ஆகியோர்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமைபொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திரு. எஸ்.அசோக்குமார், (தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), பொது மேலாளர் டாக்டர். டி.ஜெபசெல்வின் கிளாட்சன், (ஒப்பந்த மேலாண்மை), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்கலந்து கொண்டனர்’’என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்