தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.