பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது எப்போது கிடைக்கும்? முதல்வர் தகவல்

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:38 IST)
தமிழக விவசாயிகள் வாங்கி இருந்த பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பதும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் கடன் ரத்து குறித்த ரசீது எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இதற்கான பதிலை தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பயிர்கடன் ரத்து செய்வதற்கான ரசீது நாளை முதல் வழங்கப்படுகிறது என்றும் அதற்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த விழா ஒன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் அதற்கான ரசீதுகளை முதல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்