நடிகை ஏஞ்சலினா பிராட் பிட்டை ஏன் விவாகரத்து செய்தார் தெரியுமா?

வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:20 IST)
கடந்த 2014ம் ஆண்டு நடிகர் பிராட் பிட்டை,  திருமணம் செய்தார்  நடிகை ஏஞ்சலினா ஜோலி. 


 

 
 
இந்நிலையில், பிராட் பிட்டை, அவர் விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்து குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, ”பிராட் பிட் அளவுக்கு அதிகமாக குடித்து வருகிறார். அதிக அளவு போதை பொருட்களை பயன்படுத்துகிறார். அதனால் அவரை கட்டுப்படுத்த முடிவில்லை. 
 
மேலும், அவர் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மரியான் கோட்டில்லார்ட்டுடன், அவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இதை நான் துப்பறியும் நிபுணர்கள் கொண்டு கண்டுபிடித்தேன். இதன் காரணமாக தான் நான் அவரை விவாகரத்து செய்கிறேன்.” என்றார்.
 
ஏஞ்சலினா, பிராட் பிட்டை, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்