இந்த நிலையில் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து டோக்கன் தருவார்கள் என்று அரசு கூறியிருந்த நிலையில், டோக்கன் தரும் நபர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கொடுத்ததால் பொதுமக்கள் வரிசையில் நின்று பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பலருடைய பெயர் பட்டியலில் இல்லை என்று கூறப்பட்டதை அடுத்து வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் டோக்கன் கொடுப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்
அரசு தரப்பில் பயனாளிகள் பட்டியல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பட்டியலின்படி வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்குவது தான் சரியாக இருக்கும் என்றும் ஆனால் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வருவதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர் இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.