மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு - தரவரிசைப் பட்டியல் வெளியீடு

செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:38 IST)
பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான பட்டப்படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

 
ஆம், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்பிடிப்பில் சேருவதற்கு 64,900 விண்ணப்பதாரர்கள் இணையதளம் வயிலாக விண்ணப்பித்தனர். 
 
19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு  அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களுக்கும் பட்டியல் வெளியிட்டுள்ளனர். இவற்றின் முழு விவரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்