காலையில் கைதான ரஞ்சனா நாச்சியார் மாலையில் விடுதலை.. என்ன நடந்தது?
சனி, 4 நவம்பர் 2023 (19:28 IST)
நடிகையையும் பாஜக பிரபலமான ரஞ்சனா நாச்சியார் பேருந்துகளில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததை பார்த்த ரஞ்சனா நாச்சியார் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசியதாக குற்றம் காட்டப்பட்டது.
மேலும் அவர் பள்ளி மாணவர்களை அடித்ததாகவும் வெளியான வீடியோ வைரலான நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்கள் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தெரிகிறது.