முடிந்தது ராம்குமார் பிரேத பரிசோதனை: உடல் தந்தையிடம் ஒப்படைப்பு!

சனி, 1 அக்டோபர் 2016 (16:03 IST)
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மர்மமான முறையில் இறந்த ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இன்று நடைபெற்றது.


 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பிரேத பரிசோதனையை செல்வகுமார், எயிம்ஸ் மருத்துவர் கதி கே.குப்தா உள்பட 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு செய்தது.
 
இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும் ராம்குமாரின் தந்தை பரம சிவத்திடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
 
ராம்குமாரின் உடலை நாங்கள் பரிந்துரைக்கும் தனியார் மருத்துவர பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என ராம்குமாரின் தந்தை கூறியிருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் எயிம்ஸ் மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து ராம்குமாரின் உடல் இன்று எயிம்ஸ் மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்