கொலை செய்ததை நடித்துக்காட்ட உள்ள ராம்குமார்

வியாழன், 14 ஜூலை 2016 (11:51 IST)
சுவாதி கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் இருக்கும் ராம்குமார் இன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்ததை நடித்துக்காட்ட இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன.


 
 
இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
 
இதில் காவல்துறை தரப்பில் 5 நாள் போலீஸ் காவல் வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து ராம்குமார் நேற்று மாலையே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டர். அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார் எனவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விடிய விடிய விசாரணை நடத்தினர் எனவும் கூறப்படுகிறது.
 
இந்த விசாரணையில் இன்று ராம்குமார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சுவாதியை கொலை செய்தது எப்படி என்பதை நடித்துக்காட்ட உள்ளார் என்ற தகவலும் வருகின்றன. இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்