ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பாதுகாத்து வந்த எஸ்ஐ திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள கல்லூரி வளாகம் மற்றும் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளரின் முகவர்கள், வருவாய் துறை சேர்ந்தவர்கள் மற்றும் காவல் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மூன்று ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவர் நேற்று இரவு வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு மயங்கி விழுந்தார்.
இதனை அடுத்து அவர் உடனடியாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறை மரியாதையுடன் ரவிச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.