இத்தாலி போல் நாமும் உதாசீனப்படுத்த கூடாது: ரஜினிகாந்த் எச்சரிக்கை

சனி, 21 மார்ச் 2020 (16:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன் தனது டுவிட்டர் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா விவகாரத்தில் இத்தாலி உதாசீனமாக இருந்ததால் தற்போது ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். நாமும் அதுபோல் உதாசீனப்படுத்த கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிற்கு போய்விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்தாலே அது மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் இருப்பதை நாம் தடுக்கலாம்
 
அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 22ஆம் தேதி ஒரு சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதே மாதிரி ஒரு எச்சரிக்கையை இத்தாலி நாடு இரண்டாவது ஸ்டேஜில் இருக்கும் போது மக்களை எச்சரித்தது. ஆனால் அந்த நாட்டு மக்கள் அதை உதாசீனப்படுத்தினர். அதனால் பல ஆயிரம் மக்கள் பலியாகினர்
 
அதே மாதிரி நிலைமை நமது இந்தியாவில் வரக்கூடாது. ஆக எல்லாரும் 22 ஆம் தேதி இந்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த வைரஸ் பரவாமல் இருக்க அதை தடுப்பதற்கு போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு பிரதமர் கூறியபடி 22ஆம் தேதி 5 மணிக்கு அவர்களை மனதார பாராட்டுவோம். அவர்கள் அனைவரும், மற்றும் அவர்களது குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்