அரசியலுக்கு வாங்க ரஜினி: மணப்பாறை முறுக்கு வியாபாரிகள் போஸ்டர்!

ஞாயிறு, 8 நவம்பர் 2020 (13:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களில் பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
குறிப்பாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தற்போது மணப்பாறை முறுக்கு வியாபாரிகள் சார்பில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை முறுக்கு வியாபாரிகள் தொழிலாளர்கள் இணைந்து ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் விதத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர் 
 
அதில் 'ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், இப்ப இல்லை என்றால் எப்போதும் இல்லை' 'இவரை விட்டால் இனி வேற ஆளே இல்லை' என்ற வாசகங்கள் உள்ளன. மணப்பாறை முறுக்கு வியாபாரம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நிலையில் முறுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்