பாஜகவில் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்: அண்ணாமலை கருத்து!

புதன், 15 ஜூன் 2022 (20:25 IST)
தஞ்சையில் இன்று ஏராளமான ரஜினிகாந்த் ரசிகர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:
 
சூப்பர் ஸ்டாரின் சுறுசுறுப்பான ரசிகரான தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்டச் செயலாளரான திரு இரா ரஜினி கணேசன் அவர்களின் தலைமையில் ஓய்வு அறியாது நாட்டுக்கு உழைக்கும் நம் பாரத பிரதமர் 
நரேந்திரமோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்தச் சுந்தர சோழபுரமாம் தஞ்சை மாநகரில் தமிழக பாஜகவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர். 
 
ஆன்மிக அரசியலில் பற்றுக் கொண்டு தேசியத்தை வலுப்படுத்த இணைய வந்தார்களை தமிழக பாஜக சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்