இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ‘’திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ், ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாகத் தகுதி நீக்கம் செய்து, அவருடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நன்கு கண்காணித்து, அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மற்ற எந்தவிதத்திலோ தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த், மாவட்டச் செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாகக் கவனிப்பார் என்பதை தெரிவித்துக்கொண்டு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அவருடன் ஒன்றுபட்டு செயல்படவும் ஒத்துழைக்கவும் அன்புத்தலைவர் ஒப்புதலின்படி அறிவுறுத்துகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.