திமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் – ராஜேந்திர பாலாஜி அதிரடி !

வியாழன், 2 மே 2019 (14:34 IST)
திமுகவின் 40 எம்.எல்.ஏக்கள் இணைவதற்கு தயாராக இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

தின்கரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மூன்று எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் பொருட்டு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவினர் திமுக ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்று இதுகுறித்துப் பேசியுள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்கள் சுயேச்சையான தினகரனுக்கு ஆதரவாக செயலபட்டு வருகின்றனர். இதனால் கொறடா உத்தரவின் பேரில் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க இருக்கிறார். இதில் திமுகவுக்கு மூக்கை நுழைப்பது அரசியல் சந்தர்ப்பவாதம். திமுகவின் 40  எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வருவதற்கு தயாராக உள்ளனர்.அவர்களுக்கு பணம் கூட கொடுக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு திமுகவிலிருந்து வருவதற்கு தயாராக இருக்கிறார்கள் ஏனென்றால் ஸ்டாலினின் தலைமையை அவர்கள் விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்