மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் புயல் காற்று வீசும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை, அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.