மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

Siva

செவ்வாய், 21 மே 2024 (13:40 IST)
மதுரையில் நேற்று திடீரென பெய்த கன மழை காரணமாக சில பகுதிகளில் குடியிருப்புகளில் நீர் புகுந்ததாகவும் இதனை அடுத்து உடனடியாக அதிகாரிகள் அந்த நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழைநீர் புகுந்ததாகவும் தரைத்தளம் உள்பட இரண்டு தளங்களில் நீர் தேங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மழைநீர் வடிய சரியான கட்டமைப்பு இந்த நூலகத்தில் இல்லை என்பதால் தான் நீர் தேங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது என்பதும், இந்த நூலகம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் பயனாக இருப்பதாக கூறப்படும் நிலையில் மழை நீர் வெளியேற தகுந்த கட்டமைப்பு இல்லை என்ற தகவல் தற்போது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்