மதுரையில் கனமழை.. குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பரபரப்பு..!

Mahendran

திங்கள், 20 மே 2024 (11:45 IST)
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மானகிரி கபிலர் தெருவில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர். அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெறும் நிலையில், கண்மாய் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
எனவே கண்மாயில் கலக்க வேண்டிய மழை நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், மழை நீரை விரைந்து வெளியேற்றினர். தற்போது அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக மதுரை உள்பட தென் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. 
 
இதன் காரணமாகத்தான் கனமழை பெய்த பகுதிகளில் உடனடியாக மீட்பு படையினர் சென்று தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்