வடகிழக்கு பருவமழை எதிரொலி; மீட்புப்பணிகள் தீவிரம்!

வியாழன், 2 நவம்பர் 2017 (20:04 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழை பாதிப்பு பணிகளுக்கு மாவட்டந்தோறும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சற்று மாறாக வெயில் காட்டியது. பின்னர் மாலை முதல் மழை பெய்து வருகிறது. 
 
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மழை தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். 
 
மேலும், நிவாரணப் பணிகளுக்குக்காக மாவட்டந்தோறும் அமைச்சர்கள், ஆட்சி பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்