டிசம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை: வானிலை அறிவிப்பு!

திங்கள், 26 டிசம்பர் 2022 (18:52 IST)
டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக தேனி திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்