இன்னும் சில மணி நேரங்களில் 23 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

திங்கள், 26 டிசம்பர் 2022 (08:05 IST)
இன்னும் சில மணி நேரங்களில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று இன்னும் மூன்று மணி நேரத்தில் ஆகிய 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  ஆகிய 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
 
மேலும் குமரி கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்