வடகிழக்கு பருவமழை.. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மழை..!

திங்கள், 20 நவம்பர் 2023 (12:44 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் தேனாம்பேட்டை அண்ணா சாலை மாம்பலம்  உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், தச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 16% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை இயல்பாக 302.1 மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 254.6 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்