அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

வியாழன், 4 மே 2023 (17:06 IST)
தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்