மே 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு.. வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

வியாழன், 4 மே 2023 (09:41 IST)
மே 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று சேலம் நாமக்கல் மற்றும் டெல்டா பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின் அது தாழ்வு மண்டலமாக உருமாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்தால் பொதுமக்கள் அக்னி நட்சத்திர வெப்பத்தில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்