கனமழையால் நிலைகுலைந்து போன நீலகிரி மாவட்டம்: ரெட் அலர்ட் அறிவிப்பு

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:07 IST)
மும்பை உள்பட வட இந்திய நகரங்களில் கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டியதால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
 
குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனையடுத்து அங்கு காணும் இடம் எங்கும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் 
 
அதுமட்டுமின்றி நீலகிரியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து உள்ளதாகவும் அந்த பகுதி முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பெரும் சிக்கலில் உள்ளனர் 
 
கடும் வெள்ளம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அம்மாவட்டத்தில் மீண்டும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்