அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்க போகுது மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran

திங்கள், 15 ஜூலை 2024 (17:53 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இன்று இரவு தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் இன்றிரவு கனமழை பெய்யலாம் என்பதால் பயணத்தை முடிந்த அளவு தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை ஜூலை 16ஆம் தேதி தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் ஜூலை 17 முதல் 21 வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்