ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்: அதிரடி உத்தரவு..!

சனி, 4 பிப்ரவரி 2023 (15:14 IST)
ஒரு ரயில்வே ஊழியர் எந்த மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாரோ அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே போது மேலாளர் ஆர்என் சிங் தெரிவித்துள்ளார். 
 
பிற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பாக ரயில் டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களுக்கு மாநில மொழி தெரியாததால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பிரச்சனை வருகிறது என்றும் எனவே பயணிகளோடு தொடர்புடைய ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் ஆர்என் சிங் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து இனிமேல் தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள், டிக்கெட் வழங்குபவர்கள், பரிசோதகர்கள் ஆகியோர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. அதேபோல் ரயில்வே பாதுகாப்பு படையினர், வணிக எழுத்தாளர்கள், டிக்கெட் பரிசோதனை செய்பவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆகியோர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் மொழி தெரியாதவர்களுக்கு அந்தந்த மொழி பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஆர்என் சிங் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்